தேவையான பொருட்கள்
- இட்லி
- முட்டை
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- கறி மசாலா தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- சிக்கன் மசாலா பொடி
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
இரண்டு இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு முட்டை உடைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
