தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- முட்டை
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், அதனுடன் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி கலந்து விடவும்.
பின்னர், 1/2 கப் தோசை மாவு சேர்த்து கலந்து விட்டு தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
