பிரட் ஸ்வீட் போண்டா

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • மைதா
  • சர்க்கரை
  • பப்பாளி காய்
  • எண்ணெய்

செய்முறை

ஐந்து பிரட் துண்டுகளை எடுத்து அதன் நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு பொடித்துக் கொள்ளவும்.

கடாயில், 1/4 கப் மைதா, பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், இதனுடன் தேவையான அளவு சர்க்கரை, 1/2 கப் தோல் நீக்கி துருவிய பப்பாளி காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post