தேவையான பொருட்கள்
- பிரட்
- கடலை மாவு
- அரிசி மாவு
- மைதா
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக்கிய பிரட், 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு கப் பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
