தேவையான பொருட்கள்
- பிரட்
- ரவை
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- முந்திரி
- உலர் திராட்சை
- பால்
- நெய்
செய்முறை
பத்து பிரட் துண்டுகள் எடுத்து அதன் நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நெய், 1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், 1/2 கப் ரவை, பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள ரவை, பிரட், 1/2 கப் சர்க்கரைப் பொடி, வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, காய்ச்சிய பாலை மிதமான சூட்டில் இருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
