சேனைக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள்

  • சேனைக்கிழங்கு
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • சோம்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

தோல் சீவி பொடியாக நறுக்கிய ஒரு கப் சேனைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், நான்கு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post