தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- கடலை மாவு
- பொட்டுக்கடலை
- பெரிய வெங்காயம்
- பெருங்காயத்தூள்
- மிளகாய் தூள்
- சோம்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் தோல் சீவி பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் பொடியாக்கிய பொட்டுக்கடலை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் பொடித்து விட்டு (பக்கோடா அளவில்) பொரிக்கவும்.
