கோதுமை உருண்டை

தேவையான பொருட்கள்

  • கோதுமை
  • வேர்க்கடலை
  • நாட்டுச் சர்க்கரை
  • தேங்காய்
  • ஏலக்காய் பொடி
  • நெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மற்றும் 1/4 கப் வேர்க்கடலையை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின், இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், ஒரு கப் துருவிய தேங்காயை நெய்யில் வறுத்து அரைத்து வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

பாத்திரத்தில், இரண்டு கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

அரைத்து வைத்த மாவுடன், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

Previous Post Next Post