கொள்ளு பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்

  • கொள்ளு பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • கடலைப்பருப்பு
  • சீரகம்
  • உளுந்து பருப்பு
  • புளி
  • தேங்காய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

கடாயில், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், 50 கிராம் கொள்ளு பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், அதே கடாயில் இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின், இதனுடன் 1/4 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

Previous Post Next Post