தேவையான பொருட்கள்
- சுரைக்காய்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- தேங்காய்
- உப்பு
- புளி
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், 1/2 கப் பொடியாக நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அதே கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், 1/2 கப் சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு தக்காளி மற்றும் சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆறிய பின், இவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
