பச்சை பயிறு கீரை குழம்பு

தேவையான பொருட்கள்

  • பச்சை பயிறு
  • கீரை
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • பூண்டு
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

குக்கரில், ஒரு கப் பச்சை பயிறு, இரண்டு கப் தண்ணீர், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பின், ஒரு கப் கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், பத்து சின்ன வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வேக வைத்துள்ள பருப்பு கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து மசித்துக் கொள்ளவும்.

Previous Post Next Post