தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- அரிசி மாவு
- தேங்காய்
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் அரிசி மாவு சேர்த்து மிதமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்.
பின்னர், கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
