ராகி கார கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கடலைப்பருப்பு
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் அரிசி மாவு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.


Previous Post Next Post