ராகி ஸ்வீட் ஆப்பம்

தேவையான பொருட்கள்

  • ராகி
  • பச்சரிசி
  • நாட்டுச் சர்க்கரை
  • தேங்காய்
  • அவல்
  • உளுந்து பருப்பு
  • ஏலக்காய்
  • நெய்
  • உப்பு

செய்முறை

ஒரு கப் ராகி, 1/4 கப் பச்சரிசி, நான்கு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் 1/4 கப் அவல், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஏலக்காய் சேர்த்து சிறிதளவு கெட்டியாக இருக்கும் படி அரைத்து ஐந்து மணி நேரம் வைக்கவும்.

பின், அதனுடன் ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விட்டு ஆப்பக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post