வேர்க்கடலை கூட்டு

தேவையான பொருட்கள்

  • பச்சை வேர்க்கடலை
  • தேங்காய்
  • பெரிய வெங்காயம்
  • சோம்பு
  • காய்ந்த மிளகாய்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், 1/2 கப் பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

1/2 கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், வேக வைத்துள்ள வேர்க்கடலை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post