தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை
- கடலை மாவு
- மைதா
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
1/2 கப் வேர்க்கடலையை தோலை நீக்கிவிட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் மைதா, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
