காளான் புலாவ்

தேவையான பொருட்கள்

  • காளான்
  • சீரக சம்பா அரிசி
  • பெரிய வெங்காயம்
  • புதினா
  • இஞ்சி-பூண்டு விழுது
  • ஏலக்காய்
  • பிரியாணி இலை
  • பட்டை
  • லவங்கம்
  • சோம்பு
  • எண்ணெய்
  • நெய்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், ஒரு ஏலக்காய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

ஒரு கைப்பிடி புதினா மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

இரண்டு கப் சீரக சம்பா அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து சேர்க்கவும். மேலும், நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்.

இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post