தேவையான பொருட்கள்
- வெள்ளை பூசணிக்காய்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- புளி
- சீரகம்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கப் பொடியாக நறுக்கிய பூசணிக்காய், நான்கு பச்சை மிளகாய், நான்கு தக்காளி, சிறிதளவு புளி மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
