வெள்ளை பூசணிக்காய் பாயாசம்

தேவையான பொருட்கள்

  • வெள்ளை பூசணிக்காய்
  • ஜவ்வரிசி
  • சர்க்கரை
  • நெய்
  • ஏலக்காய்
  • தேங்காய்
  • உலர் திராட்சை
  • முந்திரி

செய்முறை

கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், ஒரு கப் துருவிய பூசணிக்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், பாத்திரத்தில் 1/4 கப் ஜவ்வரிசி, நான்கு கப் தண்ணீர், வறுத்து வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்னர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து 15 நிமிடங்கள் விடவும்.

ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு தட்டிய ஏலக்காய், 1/4 கப் நெய்யில் வறுத்த உலர் திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post