தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- உளுந்து பருப்பு
- உப்பு
- சீரகம்
- எண்ணெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அதே கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, சிறிதளவு புளி, ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி அளவு வதங்கிய பின், ஒரு கப் கறிவேப்பிலை மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும். இறுதியாக, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
