தேவையான பொருட்கள்
- பப்பாளி பழம்
- பால்
- சோள மாவு
- சர்க்கரை
- ஃபுட் கலர்
செய்முறை
ஒரு கப் பப்பாளியை பொடியாக நறுக்கி அரைக்கவும்.
ஒரு கப் பால் சூடானவுடன், இரண்டு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கலந்து விடவும்.
பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஆறிய பின், அரைத்து வைத்துள்ள பப்பாளி, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து கலந்து விட்டு இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
