ஸ்வீட் பிரட் ரவா இட்லி

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • ரவை
  • கேரட்
  • முந்திரி
  • சர்க்கரை
  • நெய்
  • பால்
  • சமையல் சோடா

செய்முறை

ஐந்து பிரட் துண்டை எடுத்து நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பின், கடாயில் நான்கு ஸ்பூன் நெய், 1/4 கப் ரவை, பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து வறுக்கவும்.‌

அதனுடன் 1/4 கப் துருவிய கேரட், பத்து முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின், தேவையான அளவு சர்க்கரை, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருந்து இறுக்கமாக இருக்க வேண்டும்.

இறுதியாக, இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post