முட்டை சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • முட்டை
  • பெரிய வெங்காயம்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • கொத்தமல்லி இலை
  • சீஸ்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

முதலில், இரண்டு முட்டையை வேக வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின், ஒரு பிரட் வைத்து அதன் மேலே தயார் செய்து வைத்துள்ள முட்டை வைத்து சிறிதளவு சீஸ் சேர்த்து அதன் மேலே ஒரு பிரட் வைத்து தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

Previous Post Next Post