தேவையான பொருட்கள்
- பனீர்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- மிளகுத்தூள்
- சோள மாவு
- எலுமிச்சை சாறு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக வெட்டிய பனீர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், கடாயில் 100 கிராம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள பனீரை போட்டு ஃப்ரை செய்யவும்.
