சேனைக்கிழங்கு பணியாரம்

தேவையான பொருட்கள்

  • சேனைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • மஞ்சள் தூள்
  • சீரகம்
  • கடலைப்பருப்பு
  • முட்டை
  • உப்பு
  • தோசை மாவு
  • நல்லெண்ணெய்

செய்முறை

தோல் நீக்கி பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு ஒரு கப் வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்து கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/4 கப் பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன், மசித்து வைத்துள்ள சேனைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.

ஆறிய பின்‌ இதனுடன், ஒரு கப் தோசை மாவு, ஒரு முட்டை, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post