தேவையான பொருட்கள்
- கம்பு
- அவல்
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- நாட்டுச் சர்க்கரை
- கேரட்
- தேங்காய்
- ஏலக்காய்
- நெய்
செய்முறை
ஒரு கப் கம்பு, 1/4 கப் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் 1/4 கப் அவல், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஏலக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக இருக்கும் படி அரைத்து ஐந்து மணி நேரம் வைக்கவும்.
இதனுடன் ஒரு கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி அதன் மேலே துருவிய கேரட் மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
