கம்பு தோசை

தேவையான பொருட்கள்

  • கம்பு
  • உளுந்து பருப்பு
  • அரிசி
  • வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கம்பு, 1/4 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு நான்கு மணி நேரம் வைக்கவும்.

தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post