தேவையான பொருட்கள்
- பிரட்
- ரவை
- கேரட்
- பீன்ஸ்
- பாசிப்பருப்பு
- தயிர்
- எண்ணெய்
- உப்பு
- சமையல் சோடா
செய்முறை
ஐந்து பிரட் துண்டை எடுத்து நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
பின், கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 1/4 கப் ரவை, பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 கப் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து இறுக்கமாக இருக்கும் படி கலந்து விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
