தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- சீரக சம்பா அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- சிக்கன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- பட்டை
- சோம்பு
- ஏலக்காய்
- லவங்கம்
- பிரியாணி இலை
- தயிர்
- உப்பு
- நெய்
- புதினா
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், ஒரு ஏலக்காய், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின், இரண்டு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். ஒரு கப் வாழைப்பூ, இரண்டு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
இதனுடன், இரண்டு டம்ளர் அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். மேலும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
