தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- பூசணிக்காய்
- சாம்பார் பொடி
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- எண்ணெய்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 100 கிராம் தட்டைப்பயிறை வறுத்து இரண்டாக உடைத்து தோலை நீக்கி விடவும்.
பின், பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீர், உடைத்த தட்டைப்பயிறு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய பூசணிக்காய் ஒரு கப், தேவைப்பட்டால் சிறிதளவு புளி, இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, வேக வைத்துள்ள தட்டைப்பயிறு, தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
