தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- சுரைக்காய்
- தக்காளி
- சாம்பார் பொடி
- மிளகாய் தூள்
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், ஒரு கப் தட்டைப்பயிறு, நான்கு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
பின், கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், 1/4 கப் சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், இரண்டு தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் பொடியாக நறுக்கிய சுரைக்காய், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள தட்டைப்பயிறு ஒன்று இரண்டாக மசித்து சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
