பனீர் மசாலா

தேவையான பொருட்கள்

  • பனீர்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • கறி மசாலா தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சோம்பு
  • சோயா சாஸ்
  • ரெட் சில்லி சாஸ்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் பொடியாக நறுக்கிய பனீரை எண்ணெயில் போட்டு ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு தக்காளி சேர்த்து வதங்கிய பின், ஃப்ரை செய்து வைத்துள்ள பனீர், இரண்டு ஸ்பூன் சோயா சாஸ், இரண்டு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post