தேவையான பொருட்கள்
- ராகி
- பச்சரிசி
- தேங்காய்
- உளுந்து பருப்பு
- அவல்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ராகி, 1/4 கப் பச்சரிசி, நான்கு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் நனைத்த அவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.
பின், ஆப்பக் கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
