அஜ்மீர் கேக்

தேவையான பொருட்கள்

  • பால்
  • சர்க்கரை
  • நெய்
  • எலுமிச்சை

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் சூடானவுடன், அடுப்பை மெதுவாக வைத்து கலந்து விடவும். பால் சிறிதளவு கெட்டியானவுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பால் கோவா பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும்.

பின், 200 கிராம் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகி இறுகும் வரை கலந்து விடவும்.

இதனுடன், தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.

நன்கு இறுகியவுடன், ஒரு சதுரமான தட்டில் ஊற்றி ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

Previous Post Next Post