சுரைக்காய் சூப்

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • மிளகுத்தூள்
  • காய்ந்த மிளகாய்
  • சீரகத்தூள்
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

குக்கரில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், ஒரு கப் பொடியாக நறுக்கிய சுரைக்காய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், இரண்டு கப் தண்ணீர், சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விடவும்.

பின்னர், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post