பச்சை பட்டாணி சூப்


தேவையான பொருட்கள்

  • பச்சை பட்டாணி
  • தக்காளி
  • சீரகம்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • சோள மாவு
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

குக்கரில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/4 ஸ்பூன் சீரகம், ஒரு தக்காளி, ஒரு கப் பச்சை பட்டாணி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு விசில் விடவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.


Previous Post Next Post