தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கோதுமை மாவு
- மைதா
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக நறுக்கிய பீட்ரூட்டை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின், ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு அரைத்து வைத்துள்ள பீட்ரூட் சாறு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
