பீட்ரூட் பூரி

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • கோதுமை மாவு
  • மைதா
  • ரவை
  • உப்பு
  • எண்ணெய்
  • சமையல் சோடா

செய்முறை

ஒரு கப் பொடியாக நறுக்கிய பீட்ரூட்டை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின், ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, நான்கு ஸ்பூன் ரவை, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் சாறை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post