தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- தேங்காய்
- சோம்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் தட்டைப்பயிறை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், வேக வைத்துள்ள தட்டைப்பயிறு, 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
