தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- உளுந்து பருப்பு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- இட்லி பொடி
செய்முறை
ஒரு கப் தட்டைப்பயிறு, 1/4 கப் உளுந்து பருப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைத்து தோசை கல்லில் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் இட்லி பொடி தேவையான அளவு சேர்த்து தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
