தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- கேரட்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- சீரகம்
- பாசிப்பருப்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- தோசை மாவு
- நல்லெண்ணெய்
செய்முறை
தோலை நீக்கி பொடியாக நறுக்கிய ஒரு கப் சேனைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
பின், கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 கப் பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்து வைத்துள்ள சேனைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.
ஆறிய பின், ஒரு கப் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
