தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு
- மைதா
- தோசை மாவு
- அவல்
- சர்க்கரை
- சமையல் சோடா
- ஏலக்காய்
- தேங்காய் பால்
- நெய்
செய்முறை
வேக வைத்து மசித்த மரவள்ளிக்கிழங்கு ஒரு கப், 1/4 கப் மைதா, 1/2 கப் தோசை மாவு, 1/2 கப் சர்க்கரை பொடி, தண்ணீரில் நனைத்த அவல் 1/4 கப், ஒரு ஏலக்காய், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
