பிரட் பால் பாயாசம்

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • பால்
  • சர்க்கரை
  • முந்திரி
  • ஏலக்காய் பொடி
  • நெய்

செய்முறை

நான்கு பிரட் துண்டுகளை எடுத்து நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி கடாயில் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து பிரட் துண்டுகளை சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில், 300 மில்லி பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கலந்து விடவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகள், நெய்யில் வறுத்த பத்து முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

தேவைப்பட்டால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.

Previous Post Next Post