பிரட் கேசரி

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • ரவை
  • சர்க்கரை
  • நெய்
  • எண்ணெய்
  • முந்திரி
  • ஏலக்காய் பொடி
  • கேசரி பவுடர்

செய்முறை

பத்து பிரட் துண்டுகள் எடுத்து அதன் நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.

கடாயில், 1/2 கப் ரவை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில், 500 மில்லி தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் ‌ வறுத்து வைத்துள்ள பிரட், ரவை, ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.

இடையே, நெய் (25 மில்லி) மற்றும் எண்ணெய் (25 மில்லி) கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

இதனுடன், 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இறுகிய உடன் தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.

Previous Post Next Post