தேவையான பொருட்கள்
- கீரைத்தண்டு
- தக்காளி
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
குக்கரில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு சிறிய தக்காளி, ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரைத்தண்டு, ஒரு ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
