பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்

  • பூண்டு
  • மிளகு
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • தக்காளி
  • புளி
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • பெருங்காயத்தூள்
  • கடுகு
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

பத்து பல் பூண்டு, ‌ நான்கு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின், கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு சீரகம் மிளகு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து 30 நிமிடம் ஊற வைத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். இதனுடன், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

Previous Post Next Post