ராகி கூழ்

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • உப்பு
  • இஞ்சி
  • கொத்தமல்லி இலை
  • பெரிய வெங்காயம்

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் 100 கிராம் ராகி மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கலந்து விடவும்.

கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.

பின், ஒரு துண்டு இஞ்சியை தட்டி சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் அடுப்பை மெதுவாக வைத்து வேக வைக்கவும்.

ஆறிய பின், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post