தேவையான பொருட்கள்
- காளான்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
- சாதம்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
1/2 கப் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
