தேவையான பொருட்கள்
- பன்னீர் ரோஜா
- பால்
- சேமியா
- சர்க்கரை
- நெய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
கடாயில், ஒரு ஸ்பூன் நெய் மற்றும் 1/4 கப் சேமியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
500 மில்லி காய்ச்சிய பால், 1/2 கப் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், 1/4 கப் பன்னீர் ரோஜா இதழ்கள், இரண்டு தட்டிய ஏலக்காய், நெய்யில் வறுத்த 1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
