வெஜிடபிள் சாதம்

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • காலிஃப்ளவர்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சோம்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் காலிஃப்ளவர் ஒரு கப் (நான்கும் சேர்த்து ஒரு கப்), தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

இறுதியாக, ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

Previous Post Next Post